தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு நிருபர்கள் சங்கம் என்று இயங்கிவந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம், பிற்பாடு டிவி சேனல்கள் ஆதிக்கம் அதிகம் பெற்றதால் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர் யூனியன். என்கின்ற தொழிற்சங்க யூனியனை 1994ல் பதிவு செய்யப்பட்டு, கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகள் சீரும், சிறப்போடும் நடைபெற்று வருகிறது.

இன்று தமிழக அளவில் செயல்படும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு 20 வருடமாக சென்னையில் தலைமை இடமாக செயல்பட்டுவரும் “தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்” தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணியில் உள்ள ஒரே ஒரு பத்திரிகையாளர் யூனியன்.

மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பத்திரிகை ஊடகவியாளர்களை உறுப்பினராக கொண்டுள்ள இச்சங்கம் - ஆங்காங்கே செய்திபோட்ட எதிரொலியால் சமூகவிரோதிகளால் தாக்கப்படும் சமயம் எல்லாம் எங்கள் யூனியன் நேரில் சென்று அந்த பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் காவல்துறை அரசு மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

தமிழ்நாட்டு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த யூனியன் இதுவரை மதுரை, திருச்சி, பெங்களுர் புதுடெல்லி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தர்ணா போராட்டங்களை நடத்தி அரசுக்கும் - காவல்துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்து செயல்பட்டு கொண்டிக்கிறது.

இதுவரை சுமார் 20 ஆண்டுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்களையும் 2500க்கும் மேற்பட்ட பத்திரிகை செய்தியாளர்களையும் இந்த யூனியன் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உருவாக்கி தந்துள்ளது.