கடந்த 23.06. 2024 அன்று புதுவை தேசம் பத்திரிகையின் 14 - வது ஆண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நடுவர் திரு.R.சிவராமன் தலைமையில் வாழ்க்கையில் அதிக மகழ்ச்சி தருவது பணமா, பாசமா என்ற தலைப்பில் நாகசுவை பட்டி மன்றம் நடைபெற்றது . காலை 9.40 மணிக்கு ஆரம்பித்த பட்டி மன்றம் பகல் மணி11.15 வரை நடைபெற்றது. பாசமே என்ற தலைப்பில், திரு CP இராஜன், திருமதி டாக்டர் காயத்திரி, திரு. ஜாகீர் உசேன், - ம் பணம் என்ற தலைப்பில் திரு அம்சத் இப்ராஹிம், திருமதி குழலி குமரேசன், திருV.R.ராஜி ஆகியோர்கள் தங்களது கருத்துகளை பார்வையாளர்கள், பாராட்டும் படி பேசினார்கள். இறுதியில் நடுவர் திரு.சிவராமன் தனது தீர்ப்பில் பணம் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு முக்கியம் என்றாலும், மகிழ்ச்சிக்கு மிகவும் முக்கியம் பாசம் தான் என கூறினார். இந்த இனிய நிகழ்ச்சியை அனைவரும் நன்றாக பாராட்டினர்.