வணிக காவலர் த.வெள்ளையன். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? இந்த சொல்லுக்கு சொந்தகாரர் தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர், வணிகர் காவலன் என்று மக்களால் அன்போடு அழைக்க பட்ட த.வெள்ளையன் அவர்கள். நெல்லை மாவட்டம் பிச்சு விளை என்ற ஊரில் சாதாரன குடும்பத்தில் பிறந்து, சாதாரணமான வாழ்ந்து. சரித்திரங்கள் பல படைத்து, ஒரு சகாப்தமாக உருவெடுத்தவர் . சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் வியபாரிகள், சமூக விரோதிகளாலும், ரவுடிகளாலும் தொழில் செய்ய முடியாமல் தினம் தினம் செத்து கொன்டிருந்த நேரத்தில்., நம்மை காப்பதற்கு ஒருவன் வரமாட்டானா? என்று ஏங்கிய நேரத்தில், உங்கள் துயர் துடைக்க நான் இருக்கிறேன் என்று, தைரியமாக முன் வந்து, சென்னை மற்றும் புறநகர் வணிக பேரவை என்ற அமைப்பை 1983-ம் ஆண்டு உருவாக்கியவர். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் சிதறி கிடந்த பல லட்சம் வணிகர்களை ஒன்று திரட்டி சுமார் 7000 - ற்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களை ஒன்றினைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற மிக பெரிய அமைப்பை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர், வியாரிகளை மிரட்டும் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பமமாக காட்சி தந்தவர். ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லரை வணிகம் பாதிக்கிறது என்பதை உணர்ந்து, அதை கடுமையாக எதிர்த்தவர். கோக்கோ கோலா, வால் மாட் போன்றகார்பரேட் நிறுவனங்களின் பேரங்களுக்கு அடிபணியாமல் , மக்களின் நலனை கருத்தில் கொண்டு மிக கடுமையாக எதிர்த்து பேராட்டங்கள் நடத்தியவர். இளநீர் இருக்கு, பதனீர் இருக்கு, உடலை கெடுக்கும் கோலா எதற்கு? என்ற கோஷத்தை மக்களிடம் பரப்பி, உடலை கெடுக்கும் கோலா போன்ற குளிர்பானங்களை வணிகர்கள் விற்க கூடாது .என்ற கொள்கையில் வெற்றி பெற்றவர்,. ஸ்டெர்லைட் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை, தமிழீழ பிரச்சனை,போன்றவற்றிற்கும் வணிகர்களை ஈடுபடுத்தி போராட்டங்கள் நடத்திய வர். சாதி, மதம். இனம் அனைத்தையும் கடந்து வணிகர்கள் ஒரே இனம் என்பதை நீரூபித்து காட்டியவர். தமிழீழ விடுதலைக்கு தன்னுயிரை விட்ட திரு.முத்து குமரன் இறுதி சடங்கை பல தடைகளை தாண்டி துணிச்சலோடு நடத்தியவர் அரசியல் கட்சிகள் நடத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு வணிகர்களை ஒன்று திரட்டி ஆதரவு தந்தவர். எந்த தீய சக்திக்கும் அடிபணியாமல் எங்கடன் பணி செய்து கிடப்பதே என்ற ஒன்றை மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர். பெரும் தலைவர் காமராஜி Lம் அதிக பற்று கொண்டு. அவர் வழியை பின்பற்றி, தியாகத்தின் மொத்த உருவாமாக, தன்னை இந்த சமுதாயத்திற்கு தந்தவர். ஏழையாக பிறந்து, எளிமை .தூய்மை, நேர்மை, ஆகியவற்றை கடைபிடித்து எந்த வித சொத்தையும் சேர்த்து வைக்காமல், இறுதி காலத்தில் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் கட்டுவதற்கு கூட, பணமில்லாமல் வாழ்த்து மறைந்த உத்தமசீலர் அவர். தன் வாழ்நாள் முழுவதும், வணிகர் நலனுக்காவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன்னையே அர்பணித்த வர். கல்லூரிகள், பள்ளி கூட ங்கள், கோயில்கள் அருகில், சிகரெட் புகையிலை மற்றும் போதை பொருள்களை விற்க கூடாது என்று, வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டவர். இப்படிப்பட்ட பெருமை கள் வாய்ந்த திரு வெள்ளையன் அவர்கள்.வாழும் காமராஜராக வாழ்ந்து காட்டிய வர்.தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று வியபாரிகளிடம் சொல்லி, அனைவரது கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க காரணமாக இருந்தவர்..அந்த மாமனிதரின் தியாகம் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். எந்த சொத்தையும், தனது குடும்பத்திற்கு சேர்த்து வைக்காமல், மக்கள் நலன் மற்றும் வணிகர் நலன் தான் எனது இரண்டு கண்கள் என்று, வாழ்நாள் முழுவதும் பேராடி, ஒரு மிக பெரிய பேராளியாக வாழ்ந்த மக்கள் தலைவரை பெருமை படுத்தும் விதமாக அரசு அவர் வாழ்ந்த நெல் வயல் சால யை வெள்ளையன் சாலை என்று பெயர் சூட்டுவது மட்டுமல்லாது, அவருக்கு நினைவு இல்லம், அமைத்து தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. C P. இராஜன்.