தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


பேபிஜான்சன் அவர்களின் படத்திறப்பு (23-07-2023)


july_23_event_15
july_23_event_16

பேபிஜான்சன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நமது யூனியன் நிர்வாகிகளின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் நிதி உதவி.

கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் கோவை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்த திரு. M.பேபி ஜான்சன் அவர்கள் திடீரென்று காலமானார். அன்று மதியம் 3 மணி அளவில் அவரது இரும்பொறை கிராமம் அருகே நல்லடக்கம் நடைபெற்றது. இந்த நல்லடக்கம் சமயத்தில் கோவை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஜாபர் ராஜா, அமீர் மற்றும் நமது மே.மண்டல செயலாளர் எஸ்.சக்திவேல் மற்றும் சில திருப்பூர் நிர்வாகிகளுடன் இணைந்து அன்றைய இறுதி சடங்கில் கலந்து கொண்டனர், மேசம் அன்று நடந்த பேபி ஜான்சன் அவர்களின் இறுதிச் சடங்கு செலவுத் தொகையாக ரூ 10,500 ஐ, கோவை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஜாபர்ராஜா அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார்.

இந்த துக்கத் தினத்தில் இறுதிச் சடங்கில் உடனடியாக சென்னை மற்றும் தொலைதூரத்தில் உள்ள முக்கிய மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ள இயலவில்லை. எனவே பேபி ஜான்சன் அவர்கள் இறந்த 7ம் நாளில் ஒரு படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வை மாநில நிர்வாகிகள் கூடி, மாநிலத் தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் கடந்த ஜுலை 30 ஞாயிறு அன்று மாலை, அவர் வாழ்ந்து மறைந்த இரும்பொறை கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி இந்த சிறிய படத்திறப்பு நிகழ்வுக்கு கோவை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஜாபர்ராஜாவுடன் அமீர் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளும் குறுகிய நேரத்திலும் கூட அதற்குரிய சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

இந்த படத்திறப்பு நிகழ்வுக்கு சென்னை தலைமை மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் திரு.சி.பி. இராஜன், மாநில பொருளாளர் டாக்டர் சேகர், தலைமை மாநில நிர்வாக இயக்குனர் டாக்டர் லயன் பெருமாள், மாநில துணைச் செயலாளர் திரு.வி.ஆர். ராஜி, மாநில செய்தி தொடர்பாளர் அம்ஜத் இப்ராஹிம், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை அரிமா .கே.ராஜ்கமல், மேற்கு மண்டலச் செயலாளர் திரு .எஸ் .சக்திவேல், பேபி ஜான்சன் மனைவி திருமதி. வசந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்Lர்ஸ் யூனியனின் நிறுவனர் மாநிலத் தலைவர் டாக்டர்.மு.சிவதமிழவன் அவர்கள் தலைமை ஏற்று அமரர் பேபி ஜான்சன் அவர்களின் திரு உருவப் படத்தைத் திறந்து வைத்து மலர்அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் இரங்கல் உரையாற்றினார், அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைத்து மாநில நிர்வாகிகள்மாவட்ட நிர்வாகிகள்,மண்டல செயலர் உட்பட அஞ்சலி செலுத்தி இரங்கல் உரை ஆற்றினார்கள்.

அதற்கடுத்த நிகழ்வாக நமது யூனியனின் சார்பில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு இதழின் பல ஊர் நமது நிருபர்கள் உணர்வுபூர்வமிக்க பேரன்புடன் ஐந்தே தினங்களில் வசூலான தொகை உட்பட மொத்தம் 50 ஆயிரத்தை திருமதி வசந்தி பேபி ஜான்சன் அவர்களிடம் வழங்கி ஆறுதல் கூறினோம்.செய்தி துறை மூலம் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் குடும்ப நிதியான ரூ 5 லட்சத்தை நமது யூனியன் சார்பாக பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்தோம். ஏனென்றல் பேபி ஜான்சன் அவர்கள் பணி புரிந்த 20 ஆண்டுக்கு மேல் பத்திரிகை அனுபவ சான்று கடிதங்கள் உள்ளன. மேலும் இந்த நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்விற்கு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது கவுஸ், திருப்பூர் மாவட்ட துணை அமைப்பாளர் V.முத்துக்குமார், திருப்பூர் ஏரியா சட்டம் ஒழுங்கு நிருபர் திருமதி வசந்தாமணி, ஈரோடு மாவட்ட செயலாளர் நிஸா பாஷா, மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், நீலகிரி மாவட்ட முன்னால் அமைப்பாளரும் தினகரன் நிருபருமான கே.ஏ.நாராயணன் மனைவி மேகலா மற்றும் கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகளும், பேபி ஜான்சன் குடும்பத்தார்கள், நண்பர்களும் இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

படங்கள் மற்றும் செய்தி: சேர நாடு A.A . ஜாபர் ராஜா.

july_23_event_1
july_23_event_2
july_23_event_3
july_23_event_4
july_23_event_5
july_23_event_6
july_23_event_7
july_23_event_8
july_23_event_9
july_23_event_10
july_23_event_11
july_23_event_12
july_23_event_13
july_23_event_14
july_23_event_17
july_23_event_18