பத்திரிக்கையாளர்களின் நலன் பேணும் தமிழ்நாடு அரசுக்கு நன்றிதெரிவித்து தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கூட்டத்தில் தீர்மானம்.
திருவாரூர்,அக்-10. தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் டெல்டா மண்டல கூட்டம் அதன் தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் ஏ.தேவா, அமைப்பின் மாநில இணைச்செயலாளர் ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் நலன் பேணும் தமிழ்நாடு அரசுக்கு நன்றிதெரிவித்தது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் டெல்டா மண்டல கூட்டம் அதன் தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஜாகிர் உசேன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் எ.தேவா, பத்திரிகை ஆசிரியர்கள் லீலா லோகநாதன், குழலி குமரேசன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு பங்கேற்று விழா சிறப்புரையாற்றினார். மேலும் சங்கத்தலைமை நிர்வாகிகள் சி.பி.ராஜன், டாக்டர் சிவராமன், டாக்டர் எம்.பெருமாள், டாக்டர் ஏ.சேகர் , மாநில செய்தி தொடர்பாளர் அம்ஜத் இப்ராஹீம், மாவட்ட தலைவர் ஜெயராமன், நேசக்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபால், மாவட்ட செயலாளர் தாமரை செல்வன், ஆக்ஸ்போர்ட் பள்ளி தாளாளர் ராஜ்குமார், பத்திரிக்கையாளர் கீழை அ.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் நலனை பேணும் வகையில் அவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து ,அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைத்து கொடுத்தும் , தமிழ்நாட்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெண்களுக்கு என “புதுமைப்பெண்”, “இலவச பேருந்து” , “மகளிர் உரிமைத்தொகை” உள்ளிட்ட உண்ணத திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் திருவாரூர் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடைபெற்றன . கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு காரைக்கால் ஓ.என்.ஜி.சி. சார்பில் பரிசுகளை அதன் செய்தி தொடர்பாளர் முருகானந்தம் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் வாரை.எஸ்.பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா.சங்கர் , ரயில் பாஸ்கர்,புலிவலம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மக்கள் கார்த்தி , பத்திரிக்கையாளர்கள் தினமலர் ஜெயபால் , தஞ்சை தரணியன், முத்துப்பேட்டை மாறன் மற்றும் திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாவட்ட அமைப்பாளர் கே.வி.ஆனந்த நன்றி கூறினார்.